Who We are
Welcome to Trinity Reformed Baptist Church!
திரித்துவ சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை என்பது தனிப்பட்ட முறையிலும், ஒருங்கிணைந்தும், பாவிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதையும், விசுவாசிகளைக் கட்டி எழுப்புவதையும், பரிசுத்த வேதாகமம் போதிக்கும் கர்த்தரின் ஆராதனையை நடத்தி அவரை மகிமைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. (மத்தேயு 28:18-20; பிலிப்பியர் 1:12-21; அப்போஸ்தலர் 17:22-31; யோவான் 4:23-24; பிலிப்பியர் 3:3; 1பேதுரு 5:2; அப்போஸ்தலர் 20:28-31; எபிரெயர் 13:17; 2தீமோத்தேயு 3:15-17)
ஆகவே, கர்த்தருடைய பரிபூரணமான நியாயப்பிரமாணத்தையும் (பத்து கட்டளைகள்), அவருடைய மகிமையுள்ள கிருபையின் சுவிசேஷத்தையும் நாங்கள் போதிப்பதை எங்கள் கடமையாகக் கொண்டுள்ளோம்.
அத்தோடு, விசுவாசத்திற்காகப் போராடுவதையும், புதிய உடன்படிக்கையின் கிருபையின் சாதனங்களை (திரு முழுக்கு, திருவிருந்து, பிரசங்கம் கேட்டல், ஜெபம், சபை மக்களுடன் ஐக்கியம், சபை ஒழுங்குக்கு கட்டுப்படுதல் போன்றவை) விசுவாசத்தோடும், பரிசுத்தத்தோடும் கொண்டாடுவதையும் நாங்கள் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். (யூதா 1:3-4; எபிரெயர் 3:12-14)
இத்திருச்சபை 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையை பின்பற்றும் திருச்சபையாகும்.
